பீஜிங்,
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மேற்கு கடற்கரைக்கு அருகே இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.44 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் முதலில் 5.25 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 77.50 டிகிரி மேற்கு தீர்க்கரேகையில் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.