கோடை விடுமுறையில் குழந்தைகள் குறும்பு செய்வது சாதாரணம்தான். அவர்களுக்கு நேரம் அதிகம், ஆர்வமும் அதிகம். என்ன செய்வது என்றே தெரியாமல் வீட்டில் உள்ள பெரியவர்களை சோர்வடைய செய்வர். ஆனால் அவர்களுடைய குறும்பையும், சுறுசுறுப்பையும் சரியாக திசை மாற்றினால் கோடை விடுமுறை பயனுள்ள நாட்களாக மாறும்.
“நேரத்துக்கு வேலை” திட்டம்
*குழந்தைகளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டாம்; ஆனால் ஒரு திட்டமிட்ட கட்டுப்பாடு இருக்கட்டும்.
*காலை 9-10 : சுகாதார பழக்கங்கள் + சின்ன வேலை (உதாரணம்: அறை சுத்தம்)
* 10-11: படிப்பு சார்ந்த ஏதேனும் ஒரு செயல். (புத்தகம்/வாசிப்பு/கதை)
*11 – 12: கலை, டிராயிங், பாட்டு, கவிதை என ஒதுக்கலாம்.
*பிற்பகல்: ஓய்வு அல்லது ஸ்கிரீன் டைம் (அளவோடு)
* மாலை: உடற்பயிற்சி அல்லது விளையாட்டு.
குறும்பு செய்யாமல் இருக்க புள்ளிகள் கொடுங்கள்!
* “நல்லது செய்தால் ஒரு ஸ்டார்” 10 ஸ்டார் = ஒரு விருது
* வீட்டுப் பராமரிப்பில் உதவி செய்தால் 1 ஸ்டார்
* தானாகவே புத்தகம் வாசித்தார்கள் எனில் 1 ஸ்டார்
* குறும்பு செய்ததா?-1 ஸ்டார் மைனஸ் இப்படித் திட்டமிடலாம். விருது: பேவரைட் ஐஸ்கிரீம், புத்தகம், சிறிய விளையாட்டு பொருள்
“முகாம்” திட்டம் வீட்டிலேயே சில பயிற்சி முகாம்கள் உருவாக்கலாம்!
* பாடல்முகாம் (தமிழ், ஆங்கிலப் பாடல் கற்றல்)
*உணவு முகாம் (பிடித்த எளிமையான உணவை சமைத்துப் பார்ப்பது)
* பாட்டி கதைகள்’ முகாம் நாளொன்றுக்கு ஒரு நன்னெறி கதை நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுத்தல்.
“உடல் வேலை நல்ல உறக்கம்”
* நன்றாக தூங்க உடல் உழைப்பு தேவை. மாலை நேரம் ஓரளவு உடற்பயிற்சி அல்லது சில வீட்டு வேலை செய்யச் செய்யுங்கள்:
* புத்தக அறைகளை அடுக்குதல், துணிகளை மடித்து வைத்தல், தோட்டத்திற்கு நீர் ஊற்றுதல் போன்ற வேலைகள் கொடுக்கலாம்.
சினிமா, கார்டூன் நேரத்துக்கு எல்லை
* ஒரு நாள் 1 மணி நேரத்திற்கு மேல் இல்லாமல் எலக்ட்ரானிக் திரைகளில் கட்டுப்பாடுகள் கொடுப்பது அவர்கள் கண்களுக்கு நன்மை தரும்.
*பழைய தமிழ் சினிமா பாடல்கள் “Guess the singer”, “Identify the raga” மாதிரி விளையாட்டுகள் கொடுக்கலாம்.
* செவி வழி வேலைகள் கொடுப்பது அவர்கள் கேள்வி அறிவையும், கவனத்தையும் அதிகரிக்கும் .
நண்பர்களுடன் சேர்த்து “குழு திட்டம்”
* வீட்டில் இருக்கும் பையன்/பிள்ளை குழுவாக: ஒரு நாடகம் அமைத்துக் கொடுங்கள்
*வீட்டின் உள்ளேயே “புதையல் வேட்டை” போன்ற விளையாட்டுகள் கொடுக்கலாம்.
கதை கம்ப்யூட்டர்/ஆடியோ பதிவு போன்ற பயிற்சிகளை கொடுக்கலாம்.
கதையுடன் ஒழுக்கம்
* பாட்டி,அம்மா சொல்வது போல பழமொழி + கதைகள் அதன் மூலம் அவர்களுக்கு முடிவில் ஒரு அறம் போதித்தல்.
குறும்பை கலைப்படுத்துங்கள்!
* சுவாரஸ்யமான குறும்புகளையே ஆயுதமாக மாற்றி ‘‘காமெடி நாடகம்” போல உருவாக்கலாம்.
* இதனால் பேச்சு, உடல் மொழிகள் மாறும்.
பெற்றோர்களுக்கு சிறு குறிப்புகள்:
*கோபப்படாமல், சிரிப்போடு எதையும் சொல்ல, செய்ய முயலுங்கள்.
* அவர்களின் ஆற்றலை சரியான திசையில் திருப்பினால், அந்த குறும்பே ஒரு திறமையாக மாறும்!
மனநலம் காப்பது அவசியம்
*குழந்தைகளின் மனநலத்தை கவனிப்பது அவசியம். குறிப்பாக கோடை விடுமுறையில் அவர்கள் பள்ளி இல்லாத நேரத்தில் தனிமை, வலிமை, விருப்பங்கள் போன்றவை பலமடங்காக வெளிப்படும். அதிலும் ஒற்றைக் குழந்தைகள் உள்ள வீடுகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுடன் அதிக நேரம் கொடுப்பது அவசியம்.
அவர்கள் உணர்வுகளுக்கு வார்த்தைகள் கொடுங்கள்
*கோபம் வந்தால்? ஏன் என்று அவர்களே சொல்லும் பழக்கம் வைக்கவும்.
*என்ன சொல்கிறார்கள் என்பதை குறுக்கே பேசாமல் சொல்ல விடுங்கள்.
அமைதியான நேரமும் அவசியம்
*சிந்திக்க விடுங்கள், அமைதியாக அவர்களுக்குப் பிடித்த பாடல்கள் கேட்கச் செய்து அவர்களை ஒருநிலைப் படுத்தலாம் .
ஒப்பீடு வேண்டாம்
* “உன் அக்கா இந்த வயசுல இவ்வளவு புத்தகம் படிச்சிட்டா, உன் நண்பனைப் பார் போன்ற ஒப்பீடுகள் தவிர்க்கவும்.
* பதிலாக: “உனக்குப் பிடிச்ச விஷயம் என்ன? அதை வளர்க்கலாமா?” என்று கேட்கலாம்.
*உணர்வுகளை ஹ்யூமர் வழியாக வெளியேற்ற பழக்குங்கள். முழு வலிமையுடன் குழந்தை கத்தினாள் கூட அவனை உடனடியாக சந்தோஷப் படுத்தும், அல்லது சிரிக்க வைக்கும்படியான செயல்கள் மூலம் அவர்களை கட்டுப்படுத்துங்கள்.
நன்றி சொல்லும் பழக்கம்
*ஒவ்வொரு நாளும் இரவு:‘‘இன்று உனக்கு பிடித்த விஷயம் என்ன?”
‘‘யாராவது உனக்காக ஏதாவது நல்லது செய்தாரா?” “நீ யாருக்காக
எதையாவது செய்தாயா?”போன்ற கேள்விகளுடன் நன்றி சொல்லி அல்லது டைரி போல் எழுதச் செய்து பின் உறங்க வைக்கலாம்.
சூரிய ஒளி + இயற்கை +உரையாடல் = மனநலம்
*குழந்தை அதிக நேரம் வீட்டின் உள்ளே இருந்தால் சோர்வு எளிதில் வரும்.
*அவர்களை வீட்டின் வெளியில் கூட்டிச் செல்லுங்கள்: மரத்தடியில் அமர்ந்த உரையாடல்காலாற நடந்து போவதுசூரிய உதயம் குறித்த பேச்சு அவசியம். இயற்கையின் அமைதி, குழந்தையின் மனதை நல்வழியில் மாற்றும்.
நீங்கள்தான் அவர்களின் உணர்வுக் கண்ணாடி
* நீங்கள் அவர்களுடன் இருப்பது, பேசுவது, சிரிப்பது இதுதான் அவர்களுக்கான உலகம்.
* உங்கள் பிஸியான நாளிலும் 10 நிமிடமாவது உங்கள் குழந்தைகளுக்காக கொடுக்க வேண்டும்.
கோடைகால பயிற்சி வகுப்புகளை பயன்படுத்துங்கள்
நீச்சல், யோகா, சிலம்பம், கராத்தே, ஓவியம், இசை, எழுத்து, வாசிப்பு, கணிதம் போன்ற பயிற்சி வகுப்புகள் கொடுக்கலாம். குழந்தையுடன் குழந்தையாக மாறி அவர்கள் உலகில் இருந்து அவர்களைப் பார்த்தால் நிச்சயம் அவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் சுலபமாக கொண்டு வரலாம். கத்தி, எரிச்சல் அடைந்து, கோபம் கொண்டு அதட்டுவதை விட அமைதியாக, அன்பாக சொல்ல முயற்சிக்கலாம். அதையும் மீறிய குறும்பு எனில் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை குறைத்து அதன் மூலம் பாடம் புகட்டலாம்.
– கவின்
The post கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு ! appeared first on Dinakaran.