சென்னை: கொரோனாவால் பலியானவர் உடலை தோண்டி எடுத்து சொந்த ஊரில் மறுஅடக்கம் செய்ய அனுமதித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்டின் என்பவர் உடலை அம்பத்தூர் மயானத்தில் இருந்து தோண்டி எடுத்து குமரியில் அடக்கம் செய்ய தனி நீதிபதி அனுமதி வழங்கினார். இறந்தவரின் மனைவி மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி அனுமதியளித்து செப்டம்பரில் உத்தரவிட்டிருந்தார். கொரோனாவால் பலியானவர்கள் பல்வேறு இடங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்; ஆஸ்டின் உடலை எடுக்க அனுமதித்தால் பல பிரச்னைகள் ஏற்படும் என சென்னை மாநகராட்சி மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. சென்னை மாநகராட்சியின் மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி அமர்வு உத்தரவிட்டது.
The post கொரோனாவால் பலியானவர் உடலை தோண்டி எடுக்க தடை appeared first on Dinakaran.