கொப்பரை தேங்காய் கொள்முதல் விலை ரூ.422 உயர்வு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

4 weeks ago 7

புதுடெல்லி: வரும் ஆண்டில் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ. 422 அதிகரித்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று கூடி வரும் ஆண்டில் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.422 உயர்த்தியது.

இதனால் 2025ம் ஆண்டில் ஒரு குவிண்டால் கொப்பரை தேங்காய் கொள்முதல் ரூ.12,100 ஆக உயர்ந்துள்ளது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.855 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரைக்கும் கொப்பரை தேங்காய்க்கான விலையும் குவிண்டாலுக்கு ரூ.422 அதிகரித்து ரூ.11,582 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்தியாவில் கொப்பரைப் பருவம் பொதுவாக ஜனவரியில் தொடங்கி ஏப்ரல் வரை நீடிக்கும்.

The post கொப்பரை தேங்காய் கொள்முதல் விலை ரூ.422 உயர்வு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Read Entire Article