மேலூர் : கொட்டாம்பட்டி மெயின் ரோட்டில் வடக்குபுற காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனியில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் முதல் மரியாதை அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வழங்கப்படுவது ஆண்டாண்டு காலமாக உள்ளது.கொட்டாம்பட்டி ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக உள்ளவருக்கே இக்கோயிலில் முதல் மரியாதை வழங்கப்படும்.
கடந்த மார்ச் 16ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. திருவிழாவின் முதல் நாள் மண்டகப்படி கொட்டாம்பட்டி போலீஸ் சார்பில் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காவல் தெய்வமான அய்யனார் கோயிலில் இருந்து சின்னகொட்டாம்பட்டி, மெயின் ரோடு, மந்தை வழியாக பக்தர்களின் பால்குடம், அலகு குத்தி வருதல், அக்கினி சட்டி ஏந்தி வருதல், பறவை காவடி, கரகம் ஆகியவை நடைபெற்றது.
தொடர்ந்து பொங்கல் வைப்பது, மாவிளக்கு, முளைப்பாரி எடுப்பது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது. நேற்று இரவு முளைப்பாரி ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பின் எடுத்த முளைப்பாரிகளை பாண்டாங்குடியில் உள்ள பூத்தா ஊரணியில் கரைப்பதுடன் விழா நிறைவு பெறும்.
The post கொட்டாம்பட்டி வடக்குபுற காளியம்மன் கோயில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் appeared first on Dinakaran.