கொடைக்கானலில் கொட்டியது கனமழை; மலைச்சாலையில் பாறைகள் உருண்டு போக்குவரத்து ‘கட்’

3 months ago 18

கொடைக்கானல்: கொடைக்கானலில் பெய்த பலத்த மழை காரணமாக அடுக்கம் மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்டு சிறிய பாறைகள் உருண்டு வந்ததால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. நேரம் செல்ல, செல்ல பலத்த மழையாக மாறியது. இதனால் நகரின் முக்கிய சாலைகள், வீதிகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. மாலை 6.30 மணி வரை என சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது.

இதனால் பெருமாள்மலையை அடுத்த அடுக்கம் மலைக்கிராம பகுதியில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டதுடன், சிறிய பாறை குவியல்கள் மழைநீரில் அடித்து வரப்பட்டு சாலைகளில் பரவி கிடந்தன. இதனால் அடுக்கம் – பெரியகுளம் சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் குவிந்துள்ள பாறை கற்களை அகற்றும் பணியில் நேற்று காலை முதல் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மண் சரிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

The post கொடைக்கானலில் கொட்டியது கனமழை; மலைச்சாலையில் பாறைகள் உருண்டு போக்குவரத்து ‘கட்’ appeared first on Dinakaran.

Read Entire Article