வாட்ஸ்அப், மெட்டாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவு

3 hours ago 1

புதுடெல்லி: மெட்டா நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நிர்வகித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை 30 கோடிக்கும் மேற்பட்டோர் பேஸ்புக் சமூக வலைதளத்தையும், 50 கோடி பேர் வாட்ஸ்அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் கடந்த 2021ம் ஆண்டு தனியுரிமை கொள்கையை புதுப்பித்தது. அதன்படி வாட்ஸ்அப் செயலியில் பதிவிடப்படும் தகவல்கள் மெட்டாவின் பிற சமூக வலைதளங்களுக்கு வணிக நோக்கங்களுக்காக பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய இந்திய போட்டி ஆணையம் கடந்தாண்டு நவம்பர் மாதம் தகவல்களை பரிமாற மெட்டா நிறுவனத்துக்கு ஐந்தாண்டுகளுக்கு தடை விதித்தது. இந்திய போட்டி ஆணையத்தின் இந்த தடை உத்தரவை எதிர்த்து மெட்டா நிறுவனம் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம், இந்த தடையால் வாட்ஸ்அப்பின் வணிக உத்திகள் சீர்குலைந்து விடும் என தெரிவித்ததுடன், இந்திய போட்டி ஆணையம் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டது.

The post வாட்ஸ்அப், மெட்டாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article