கைதி ஊதியத்தில் பிடித்தம் செய்யும் இழப்பீடு நிதி பாதிக்கப்பட்டவருக்கு முறையாக வழங்கப்படுகிறதா? அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

2 weeks ago 2

சென்னை: வேலூர் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவருக்கு முதல் வகுப்பு ஒதுக்கக் கோரி கடலூரைச் சேர்ந்த தீபா லக்‌ஷ்மி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்காக சிறையில் பணிபுரியும் கைதிகளின் ஊதியத்தில் இருந்து 20% பிடித்தம் செய்யப்படுகிறது.

ஆனால் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இம்மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிடித்தம் செய்யப்படும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து குழு அமைத்து வரும் 30ம் தேதிக்குள் அறிக்கை தர தலைமை கணக்கு தணிக்கையாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post கைதி ஊதியத்தில் பிடித்தம் செய்யும் இழப்பீடு நிதி பாதிக்கப்பட்டவருக்கு முறையாக வழங்கப்படுகிறதா? அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article