செங்கல்பட்டு: மறைமலைநகர் அடுத்த சட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்(42). இவர் மறைமலைநகர் சிப்காட் சந்தாராணிகுளம் அருகில் டீ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றையதினம் இரவு டீ கடைக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஜெய்சாந்தி(34) ஆகியோரை கேலிகிண்டல் செய்துள்ளனர். அதனை தட்டிக்கேட்ட கார்த்திகேயனையும் அவரது மனைவியையும் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் கணவன், மனைவி இருவரையும் மீட்டு பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுதித்தனர். சிகிச்சை பெற்றுவந்த ஜெய்சாந்தி மறைமலைநகர் காவல்நிலையத்தில் அவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அக்கம்பக்கத்தில் விசாரணை மேற்கொண்டு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மெல்ரோசாபுரம் பகுதியை சேர்ந்த சரித்திரபதிவேடு குற்றவாளியான மணிகண்டன் (29) என்ற சுள்ளான் மணி மற்றும் அவரது மைத்துனர் சூர்யா (20) ஆகியோரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். மேலும் சுள்ளான்மணி மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. தப்பிச் சென்ற அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
The post கேலி கிண்டல் செய்தவர்களை தட்டி கேட்ட தம்பதியை தாக்கிய வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.