கேரளாவில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய பிரியங்கா காந்தி

5 hours ago 3

கோழிக்கோடு,

பிரியங்கா காந்தி கேரள மாநிலத்தில் உள்ள அவரு டைய தொகுதியான வயநாட் டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மாலை கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஈங்காப்புலா சாலையில் பிரியங்கா காந்தி பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் 2 கார்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு குடும்பத்தினர் படுகாயம் அடைந்தனர். விபத்தை கண்டதும் பிரியங்கா காந்தி தனது வாகனத்தை நிறுத்தி னார்.

அவர் காரை விட்டு இறங்கி மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு தன்னுடைய பாதுகாவலர்களிடம் தெரிவித்தார். மேலும் டாக்டர்களை வரவழைத்து முதல் உதவி அளிக்க ஏற்பாடு செய்தார். அவருடைய பாதுகாப்பு குழுவுடன் வந்த ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட வர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் விபத்து குறித்து அவர் விசாரித்து விட்டு சென்றார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி அலுவலகம் பிரியங்கா காந்தி விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய வீடியோவை வெளியிட்டுள்ளது.  

Read Entire Article