
விழுப்புரம்,
கண்டமங்கலம் கோட்டத்தை சார்ந்த வளவனூர் துணை மின் நிலையத்தில் உள்ள மோட்சகுளம் மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இதனால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அற்பிசம்பாளையம், புதுப்பாளையம், தாதம்பாளையம், சிறுவந்தாடு, உப்புமுத்தாம்பாளையம், மோட்சகுளம், பக்கமேடு, எம்.ஜி.ஆர். நகர், காந்தி நகர், கள்ளிக்குளம், புத்து, அய்யனார் கோவில் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.