கேரளாவில் ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 week ago 3


திருவனந்தபுரம்: கேரளாவில் ஓடும் ரயில்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசுக்கு மிரட்டல் போன் வந்ததைத் தொடர்ந்து ரயில்களில் பரிசோதனை நடத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள போலீஸ் தலைமையகம், எர்ணாகுளம் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒருவர் பேசினார். அப்போது கேரளாவில் ஓடும் ரயில்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த போலீசார் இது குறித்து ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து இரவோடு இரவாக கேரள போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் பாலக்காடு முதல் திருவனந்தபுரம் வரை ஓடும் அனைத்து ரயில்களிலும் சோதனை நடத்தினர்.

ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதற்கிடையே போனில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் பத்தனம்திட்டா மாவட்டம் ரான்னி பகுதியைச் சேர்ந்த ஹரிலால் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் குடிபோதையில் போன் செய்ததாக அவர் கூறினார்.

The post கேரளாவில் ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article