திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையின் தீவிரம் இன்னும் குறையவில்லை. ஒரு சில நாட்கள் இடைவேளை இருந்தபோதிலும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி இன்று இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து நாளை இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும், 6ம் தேதி திருவனந்தபுரம், மலப்புரம், கோழிக்கோடு உள்பட 6 மாவட்டங்களுக்கும், 7ம் தேதி மலப்புரம், கோழிக்கோடு உள்பட 5 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையுடன் பலத்த காற்றும், இடி, மின்னலும் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post கேரளாவில் மழை தொடர்கிறது; 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை appeared first on Dinakaran.