லண்டன்: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இந்நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்தியா-பாகிஸ்தான் விவகாரம் குறித்து நேற்று விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் வெளியுறவு துறை அமைச்சர் ஹமிஷ் பால்கனர், பேசுகையில், ‘‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். விரைவான தீர்வுகள் எட்டப்படுவதற்கு பேச்சு தொடங்க வேண்டும்.
இங்கிலாந்து இரு நாடுகளுடனும் நெருக்கமான மற்றும் தனித்துவமான உறவை கொண்டுள்ளது. பொதுமக்கள் உயிரிழப்புக்களை பார்ப்பது மனவேதனை அளிக்கிறது. இது மேலும் அதிகரித்தால் யாருமே வெற்றி பெற முடியாது. இப்போது பிராந்திய ஸ்திரதன்மையை மீட்டெடுப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளில் அனைத்து தரப்பினரும் அவசரமான கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.
The post இந்தியா -பாகிஸ்தான் மோதல் பதற்றத்தை குறைக்க இங்கி. நாடாளுமன்றம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.