பழிக்கு பழி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்: டிரம்ப் வலியுறுத்தல்

5 hours ago 3

வாஷிங்டன்: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்காவில் ஓவல் அலுவலகத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘‘இது மிகவும் மோசமானது. என் நிலைப்பாடு என்னவென்றால் நான் இரு நாடுகளுடனும் நல்ல உறவில் இருந்து இணைந்து செயல்பட் வருகிறேன்.

இரண்டு நாடுகளையும் நான் நன்றாக அறிவேன். அவர்கள் இந்த பிரச்னையை சரிசெய்வதை பார்ப்பதற்கு நான் விரும்புகிறேன். அவர்கள் நிறுத்துவதை பார்க்க விரும்புகிறேன். இப்போது அவர்களால் நிறுத்த முடியும் என்றும் நான் நம்புகிறேன். பழிக்கு பழி நடவடிக்கையை நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன். நான் உதவி செய்வதற்கு ஏதாவது இருந்தால் நான் கண்டிப்பாக அவர்களுடன் இருப்பேன்” என்றார்.

 

The post பழிக்கு பழி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்: டிரம்ப் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article