
திருவனந்தபுரம்,
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால்தான் என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார். அவரது சமீபத்திய படமான 'தொடரும்' பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான இப்படம் 15 நாட்களில் கேரளாவில் ரூ.90.35 கோடியும் உலகளவில் ரூ184.70 கோடியும் வசூலித்து '2018' படத்தின் வசூலை முந்தி கேரளாவில் அதிக வசூல் செய்த மலையாள படங்களில் முதல் இடத்தையும் உலகளவில் அதிக வசூல் செய்த மலையாள படங்களில் 3-வது இடைத்தையும் பிடித்திருக்கிறது.
உலகளாவிய வசூலைப் பொறுத்தவரை, 'தொடரும்' இன்னும் மோகன்லாலின் 'எல்2 எம்புரான்' (ரூ.265.5 கோடி) மற்றும் மஞ்சுமல் பாய்ஸ் (ரூ.240 கோடி) படங்களை முறியடிக்கவில்லை. விரைவில் அந்த சாதனையையும் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.