கேரளா: பள்ளத்தாக்கில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து - சிறுமி பலி

4 days ago 3

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியில் இருந்து எர்ணாகுளத்திற்கு இன்று காலை அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 16 பேர் பயணித்தனர்.

எர்ணாகுளத்தின் நீரிமங்களம் அருகே மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணித்த கட்டப்பனா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article