
கண்ணூர்,
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் ஆழீக்கோடு நீர்காவுவில் உள்ள முச்சிரியன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த கோவில் திருவிழாவில் இன்று அதிகாலை 4 மணியளவில் வேடிக்கைகள் நடத்தப்பட்டன.
அப்போது காற்றில் வெடிக்க வேண்டிய பட்டாசு கூட்டத்திற்குள் விழுந்து வெடித்ததில் 5 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 பேரில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.