
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் தமன் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான 'பாய்ஸ்' படத்தில் நடித்திருந்தார்.
தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தில் தமன் நடிக்கிறார். இந்நிலையில், திருமணம் பற்றி இவர் கூறி இருக்கும் கருத்து சர்ச்சையாகி இருக்கிறது. அவர் கூறுகையில்,
'திருமணம் செய்து கொள்' என நான் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை. ஏனென்றால், திருமணத்தை காப்பாற்றுவது தற்போது கடினமாகிக் கொண்டே வருகிறது. இன்றைய பெண்கள் யாரையும் சார்ந்திராமல் சுதந்திரமாக இருக்க விரும்புவதே அதற்கு காரணம்' என்றார்.