
இன்றைய பஞ்சாங்கம்:-
குரோதி வருடம் மாசி மாதம் 10-ம் தேதி சனிக்கிழமை
நட்சத்திரம்: இன்று பிற்பகல் 03-22 வரை கேட்டை பின்பு மூலம்
திதி: இன்று காலை 10-46 வரை நவமி பின்பு தசமி
யோகம்: சித்த யோகம்
நல்ல நேரம் காலை: 7.30 - 8.30
நல்ல நேரம் மாலை : 4.30 - 5.30
ராகு காலம் காலை : 9.00 - 10.30
எமகண்டம் மாலை : 1.30 - 3.00
குளிகை காலை : 6.00 - 7.30
கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30
கௌரி நல்ல நேரம் மாலை: 9.30 - 10.30
சூலம் :கிழக்கு
சந்திராஷ்டமம் :கார்த்திகை, ரோகினி
இன்றைய ராசிபலன்:-
மேஷம்
குடும்பத்தில் வாக்குவாதம் வேண்டாம். மூத்த சகோதரரால் நன்மை விளையும். மருத்துவர்கள் சாதனைப் படைப்பர். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். உத்யோகஸ்தர்களுக்கு கடன் பைசலாகும். நண்பர்கள் விசயத்தில் விட்டுக் கொடுங்கள். மனதில் மகிழ்ச்சி நிலவும்.
அதிர்ஷட நிறம்: பச்சை
ரிஷபம்
தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷட நிறம்: வெள்ளை
மிதுனம்
ஆசிரியர்கள் பாராட்டினை பெறுவர். மாணவர்கள் சாதனைப் படைப்பர். கலைஞர்களது படம் திரைக்கு வர ஆயத்தமாகும்.மனம் அமைதியைத் தேடும். பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். பழைய கடனில் ஒரு பகுதி தீரும். தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருப்பர்.
அதிர்ஷட நிறம்: சிவப்பு
கடகம்
இனிமையான சம்பவம் உண்டாகும். பிள்ளையின் திருமண விழா பற்றி திட்டமிடுவீர்கள். வழக்கு வெற்றி பெறும். நல்ல காரியம் ஒன்று எளிதில் முடியும். ஆசிரியர் மாணவர்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பங்குச் சந்தையில் கவனம் தேவை.
அதிர்ஷட நிறம்: பச்சை
சிம்மம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு காதல் கண்சிமிட்டும். வேலையில்லாதவருக்கு நேர்முகத் தேர்வில் வெற்றிபெறுவர். விவசாயிகளுக்கு கேட்ட கடன் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் தங்கள் மதிப்பு உயரும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கன்னி
நவீன வாகனம் வாங்க லோன் கிடைக்கும். இரவு நேர பயணத்தின் போது அதிக கவனம் தேவை. அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் அதிபர்கள் முதலீட்டினை அதிகரிப்பர். புதியவர்களின் அறிமுகம் நன்மையில் முடியும். மாணவர்களின் தேவை பூர்த்தியாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
துலாம்
திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் கிட்டும். மாணவர்களின் கனவு நனவாகும். ரியல் எஸ்டேட் மற்றும் கமிஷனில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு தொகை கிட்டும். எதிர்பார்த்த ஒரு காரியம் சிறப்பாக நடந்தேறும். வேற்றுமொழி மதத்தவர் தங்களுக்கு உதவுவர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
விருச்சிகம்
பணவரவில் பங்கம் இல்லை. வெளி நபர்களிடம் எச்சரிக்கைத் தேவை. அரசியல்வாதிகளுக்கு புகழ் ஓங்கும். வழக்கு வெற்றி காணும். சிறு தூர பயணம் வெற்றி தரும். தம்பதிகளிடையே அன்பு கூடும். பெண்களுக்கு அறியாமை விலகும். புதிய நட்பால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷட நிறம்: நீலம்
தனுசு
வங்கிக் கடன் கிடைக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விசயங்களில் தங்களுக்கு நன்மை உண்டாகும். கணினித்துறைனிருக்கு விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த சந்தேகம் விலகும், ஒற்றுமை மேலோங்கும். தங்கள் சேமிப்பு உயரும்.
அதிர்ஷட நிறம்: ஆரஞ்ச்
மகரம்
நண்பர்களின் மத்தியில் மரியாதை கூடும். சக ஊழியர்களிடம் முன் கோபத்தை தவிர்க்கவும். விளையாட்டில் வெற்றி தொடரும். தம்பதிகளிடையே அன்பு நீடிக்கும். காதல் கசக்கும். தாயின் உடல் நலம் சீரடையும். எதிர்பார்த்த காரியம் வெற்றியடையும்.
அதிர்ஷட நிறம்: வெள்ளை
கும்பம்
இளைஞர்களுக்கு நல்ல வேலை கிட்டும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆணையை ஏற்று நடப்பீர்கள். நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். அத்யாவசியமானதா என பார்த்து செலவு செய்யவும்.
அதிர்ஷட நிறம்: சிவப்பு
மீனம்
பழைய வாகனத்தை கொடுத்து விட்டு நவீன வாகனம் வாங்குவீர்கள். தொழில் நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உடல் நலம் சிறக்கும். தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். மகள் மற்றும் மகன் படிப்புக்காக வாங்கிய கடனில் ஒரு தொகையை அடைத்து விடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
