
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 24 வயது நபருக்கு கப்பல் மேலாண்மை நிறுவனத்தின் அதிகாரி என கூறி ஒருவர் தொடர்பு கொண்டார். அந்த நபர் தென்னாப்பிரிக்காவின் கப்பல் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறினார்.
அப்போது சில ஆவணங்கள் மற்றும் ரூ. 2.5 லட்சம் பணத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த மர்ம நபர் தெரிவித்தார். இதனை முழுமையாக நம்பிய வாலிபர் தனக்கு வேலை கிடைக்க போகிறது என்கிற மகிழ்ச்சியில் தனது அசல் பாஸ்போர்ட் மற்றும் சில சான்றிதழையும் கொடுத்துள்ளார். மேலும் அதனுடம் ரூ. 2.5 லட்சம் பணத்தையும் வேலை வாங்கி தருவதாக கூறிய தானேவை சேர்ந்த சித்தி மற்றும் அவரது கூட்டாலி ரோஷன் ஆகிய இருவரிடம் ஒப்படைத்தார். வேலை குறித்து பின்னர் தகவல் தெரிவிப்பதாக கூறியதை நம்பி வாலிபர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் வேலைக்காக பல நாட்களாக காத்திருந்தார். இருப்பினும் எந்த அழைப்பும் வரவில்லை இதனால் அந்த வாலிபர் தனது பணம் மற்றும் ஆவணங்களை திரும்ப கோர தொடர்புகொள்ள முயற்சித்தும் தொடர்புகொள்ள முடிய வில்லை.
பின்னர் பாதிக்கப்படவர் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கேரளாவில் உள்ள நவுபாடா போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சித்தி மற்றும் ரோஷனை தீவிரமாக தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள், இதே போன்ற வாக்குறுதிகளை அளித்து மேலும் பலரை ஏமாற்றியுள்ளார்களா என்பதைக் கண்டறிய விசாரணை நடந்தப்பட்டு வருகிறது.