கேரள முதல்-மந்திரியாக நடிக்கும் டோவினோ தாமஸ்

3 months ago 15

சென்னை,

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் 'மாரி, மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸூக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் டோவினோ தாமஸ் கேரள முதல்-மந்திரியின் மகனாக ஜித்தின் ராமதாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் டோவினோ தாமஸ் இரண்டாம் பாகத்தில் கேரள மாநிலத்தின் இளம் முதல்-மந்திரியாக நடித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான 'ஏ.ஆர்.எம்' படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதே சமயத்தில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Read Entire Article