கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது ஏன்? - மனம் திறந்த விராட் கோலி

2 hours ago 1

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி (வயது 36). இவர் இந்திய அணிக்காக 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இந்திய அணிக்காக 82 சதங்களை அடித்து அசத்தி உள்ளார். சீனியர் வீரரான விராட் கடந்த டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். மேலும், ஐ.பி.எல். தொடரிலும் ஆடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் இதுவரை 262 போட்டிகளில் 8447 ரன்கள் குவித்துள்ளார். விராட் கிரிக்கெட் ரசிகர்களால் 'கிங்'என செல்லமாக அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில் இந்தியா, ஆர்சிபி கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து விராட் கோலி மவுனம் கலைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;

ஒரு கட்டத்தில், என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்ததால் அது எனக்கு கடினமாகிவிட்டது. நான் 7-8 ஆண்டுகள் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தேன். ஒன்பது ஆண்டுகள் ஆர்சிபி அணிக்கு கேப்டனாக இருந்தேன். நான் விளையாடிய ஒவ்வொரு ஆட்டத்திலும் பேட்டிங் பார்வையில் என் மீது எதிர்பார்ப்புகள் இருந்தன.

கவனம் என்னை விட்டு விலகியது என்ற உணர்வு எனக்கு இல்லை. கேப்டன் பதவி இல்லையென்றால், பேட்டிங்கில் கவனம் இருக்கும். நான் அதை 24×7 அனுபவித்தேன். அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது, இறுதியில் அது மிகையானது. அதனால்தான் நான் ராஜினாமா செய்தேன், ஏனென்றால் நான் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன்.

மற்ற அணிக்கு சென்று விளையாடினால் கோப்பையை வெல்ல முடியும் என்று என்னிடம் சொன்னார்கள். என்னுடைய கேரியரின் உச்சகட்ட சமயத்தில் வேறு அணிக்கு சென்று விளையாட எனக்கும் வாய்ப்புகள் இருந்தது. 2016 - 2019 காலங்களில் அந்தப் பரிந்துரைகள் ஏராளமாக வந்தன.

இருப்பினும் இந்தியாவுக்காக எனது கேரியரில் நிறைய வென்றுள்ள நான் ஏராளமான பாராட்டுகளையும் பெற்றுள்ளேன். அதனால் பெங்களூருவை விட்டு வெளியேறி புதிய அணியில் சாதிக்க வேண்டுமா? என்ற முடிவெடுக்க வேண்டியிருந்தது. அது போன்ற சூழ்நிலையில் வேறு அணிகளை விட இத்தனை வருடங்களாக பெங்களூருவுக்கு விளையாடியதால் ரசிகர்களிடம் ஏற்பட்ட உறவு முக்கியம் என்று நினைத்தேன். அதனால் வெற்றி, தோல்வி பரவாயில்லை. இதுவே என்னுடைய வீடு"

இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 505 ரன்கள் விளாசி, அதிக ரன்களை அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Read Entire Article