
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் 67 ரன் எடுத்தார்.
மும்பை தரப்பில் பாண்ட்யா, பவுல்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 209 ரன் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக 12 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் க்ருனால் பாண்ட்யா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த போட்டின் ஆட்டநாயகன் விருது ரஜத் படிதாருக்கு வழங்கப்பட்டது. முன்னதாக மும்பை அணி பேட்டிங்கின் போது 12-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் தூக்கி அடித்த பந்தை யாஷ் தயாள் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகிய இருவரும் பிடிக்க முயன்றனர்.
அப்போது இருவரும் மோதிக்கொண்டதால் கேட்சை தவறவிட்டனர். இதனால் கடுப்பான விராட் கோலி தொப்பியை கீழே தூக்கி எறிந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.