''கூலி' படத்தில் நான் இல்லை' - சந்தீப் கிஷன்

2 months ago 13

சென்னை,

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன். தமிழில் யாருடா மகேஷ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அண்மையில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் , ராயன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது மசாக்கா படத்தில் நடித்துவரும் இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி'படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், அதற்கு சந்தீப் கிஷன் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'உண்மையாகவே நான் 'கூலி' படத்தில் இல்லை. லோகேஷ் என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர். எனக்கு என்ன நல்ல விஷயம் நடந்தாலும் முதலில் அவருக்குதான் தெரியும். அதேபோல், அவருக்கு நடந்தால் முதலில் என்னிடம்தான் சொல்லுவார்' என்றார்.

Read Entire Article