கூட்டுறவு கல்வி, மேலாண்மை பயிற்சி நிலையங்களை மேம்படுத்த முன்னெடுத்த திட்டங்கள் என்ன? தயாநிதி மாறன் எம்பி கேள்வி

4 weeks ago 5

புதுடெல்லி: கூட்டுறவு கல்வி மற்றும் மேலாண்மை பயிற்சி நிலையங்களை மேம்படுத்த ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து திமுக நாடாளுமன்ற குழு துணைத்தலைவர் தயாநிதிமாறன் எம்பி மக்களவையில் கேள்வி எழுப்பி உள்ளார். கூட்டுறவுக் கல்வி மற்றும் அதன் மேலாண்மைப் பயிற்சி நிலையங்களை வலுப்படுத்தவும், பயிற்சி நிலையங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், கிராமப்புற கூட்டுறவு வங்கிகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கான வருவாய்த் தேவையை ஈடுசெய்யவும் ஒன்றிய அரசு வகுத்துள்ள திட்டங்கள் என்ன என்பன போன்ற பல்வேறு கேள்விகளை ஒன்றிய கூட்டுறவுத்துறை அமைச்சகத்திடம் மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் கேட்டுள்ளார்.

அதன் விவரங்கள் பின்வருமாறு:
* கூட்டுறவு மேலாண்மை நிலையங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் முன்னெடுக்க உள்ள திட்டங்களின் விவரங்களைத் தெரியப்படுத்தவும்.
* கூட்டுறவுக் கல்வி மற்றும் அதன் மேலாண்மைப் பயிற்சி நிலையங்களை வலுப்படுத்த மாநில அரசுகளுக்கு உதவும் வகையில் ஒன்றிய கூட்டுறவுத்துறை அமைச்சகம் வகுத்துள்ள திட்டங்கள் என்ன?.
* மக்களுக்கான கடன் தொகையை குறைந்த வட்டியில் வழங்குவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ள கிராமப்புற கூட்டுறவு வங்கிகள், மக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான வருவாயினையும் ஈடுசெய்யும் வகையில் ஒன்றிய அரசு வகுத்துள்ள திட்டம் என்ன? எனக் கேள்வி எழுப்பினார்.

The post கூட்டுறவு கல்வி, மேலாண்மை பயிற்சி நிலையங்களை மேம்படுத்த முன்னெடுத்த திட்டங்கள் என்ன? தயாநிதி மாறன் எம்பி கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article