திருச்சி, ஜன.20: திருச்சியில் பொங்கள் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப மக்கள் ஆயத்தம். திருச்சியில் மத்திய பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழர் திருநாளாம் பொங்கள் திருநாள் தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜன.14ம்தேதி கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜன.15 மாட்டுப்பொங்கள் மற்றும் உழவர் திருநாள் போன்று தொடர்ந்து விடுமுறை நாட்கள் வந்தது. தமிழ்நாடு அரசும் மக்கள் சீரமமின்றி பண்டிககை கொண்டாட ஏதுவாக ஜன.14ம் தேதி முதல் 18ம் தேதி வரை விடுமுறை அளித்தது, அதோடு 19ம் தேதி ஞாயிறுக்கிழமை வந்ததால் 1 வார விடுமுறையை முன்னிட்டு மக்கள் அனைவரும் தாங்கள் சொந்த, பந்தங்களுடன் பண்டிகையைக் கொண்டாட பணி செய்யும் ஊர்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கினர். தலைநகரான சென்னையில் இருந்து மட்டும் சுமார் 15 லட்சம் பேர் வேறு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
மக்கள் சொந்த ஊர்களுக்கு கூட்ட நெரிசலின்றி எளிதாக சென்று திரும்ப ஏதுவாக போதுமான பேருந்து வசதிகள் ஏற்படுத்த தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முக்கிய மாவட்டங்களிலிருந்தும் வெளியூர்களுக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தது. மத்திய மாவட்டமான திருச்சியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுலமாக சென்று வரலாம். இதனால் திருச்சி மாவட்டத்திலிருந்து சென்னை, மதுரை, கோவை, சேலம் போன்ற மாவட்டங்களுக்கு செல்ல ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மத்திய பஸ் நிலையத்தில் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க ஏதுவாக தஞ்சாவூர், மதுரை மற்றும் கன்னியாக்குமரி மாவட்டங்கள் செல்லும் பேருந்துகளுக்கு திருச்சி மன்னார்புரம் ரவுண்டானா மற்றும் வில்லியம்ஸ் சாலையில் தஞ்சாவூர் செல்லும் பேருந்துகளும் நின்று செல்ல ஏதுவாக தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கள் விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மக்கள் பணிபுரியும் இடங்களுக்கு திரும்ப செல்ல துவங்கினர். இதனால் நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம் போன்ற மாவட்டங்களுக்க செல்லும் பேருந்து அனைத்தும் மக்கள் கூட்டம் நிறைந்தே காணப்பட்டது. ஊர்திரும்பும் மக்கள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே பயண்சீட்டு முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இருந்தும் சிலர் பயணச்சீட்டை முன்பதிவு செய்யாமலேயே பயணம் மேற்கொண்டனர். போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் கடந்த ஆண்டை காட்லும் இந்த ஆண்டு மக்கள் கூட்ட நெரிசலின்றி சுலபமான தங்கள் பணிசெய்யும் ஊர்களுக்கு திரும்பினர். இதேபோல் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான சிறப்பு ரயில்களும் திருச்சி மாவட்டத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
ரயிலில் பிற மாவட்டங்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு ஆன்லைனில் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தன. அதேபோல் தக்கல் பயணச்சீட்டுகளும் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன. திருச்சி ரயில் நிலையத்திலும் நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சாலை மார்க்கமான கார்களிலும் மக்கள் புறப்பட்டனர். இதனால் திருச்சி – சென்னை மற்றும் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில் கார்கள் மற்றும் பேருந்துகள் போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து சென்றன. இதனால் நகரிலும் மாலையில் சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
The post கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் கூட்ட நெரிசலின்றி மக்கள் வெளியூர் பயணம் appeared first on Dinakaran.