உதகை: உதகையிலிருந்து நடுவட்டம் மலைப்பாதை வழியாக கேரளா மற்றும் கர்நாடக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், போக்குவரத்தைச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், உதகையிலிருந்து கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சுமார் 50 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை ஆகும். இந்தச் சாலை வழியாகத் தான் உதகையிலிருந்து கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சரக்கு லாரி ஒன்று சமவெளிப் பகுதியிலிருந்து அரிசி ஏற்றி உதகை - கூடலூர் நெடுஞ்சாலையில் நடுவட்டம் தவலமலை அருகே உள்ள மலைப்பாதையில் கவிழ்ந்தது.