கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் முகாம்: பொதுமக்கள் அவதி

3 hours ago 2

 

கூடலூர், நவ.26: கூடலூரை அடுத்து மேற்கு மலை தொடர்ச்சி வனப்பகுதி, யானை, காட்டுமாடு, மான், குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. இந்நிலையில் அங்கு வாழும் குரங்குகள் லோயர் கேம்ப் குடியிருப்பு பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குரங்குத் தொல்லையினால் லோயர் கேம்ப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் உணவு பொருட்களையும் குரங்குகளிடமிருந்து பாதுகாக்க பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

வனப்பகுதியில் வாழ்ந்து வந்த குரங்குகள் குமுளி மலைச்சாலையில் வாகன ஓட்டிகள் கொடுத்த உணவுகளால் கவரப்பட்டு மலையிலிருந்து கீழே இறங்கி அடிவாரப் பகுதியான லோயர் கேம்ப் குடியிருப்பு பகுதியில் உணவைத் தேடி வரத் துவங்கியுள்ளன. இதனால் குரங்குகளின் தொல்லை அதிகரித்து பொதுமக்கள் அவதிக்குளாகி வருகின்றனர். ஆகையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றித்திரியும் குரங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் முகாம்: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article