கூடலூரில் மக்களை அச்சுறுத்தி வந்த புல்லட் யானை பிடிபட்டது

6 months ago 17

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 'புல்லட்' என்று அழைக்கப்படும் யானை தொடர்ந்து குடியிருப்புகளை, இடித்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக வீடுகளை சேதப்படுத்தியதுடன், மனிதர்களையும் தாக்கி கொன்றுள்ளது. இதுவரையில் 35 வீடுகளை இடித்து தள்ளியுள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சத்திலேயே இருந்து வருகின்றனர்.

புல்லட் யானையின் அச்சுறுத்தலால், தேயிலை தோட்டத் தொழிலாளர்களும் வேலைக்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, மக்களை அச்சுறுத்தி வந்த புல்லட் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக, கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் கும்கி யானையுடன் வனத்துறையினர் புல்லட் யானை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், பந்தலூர் அருகே உள்ள அய்யங்கொல்லி பகுதியில் இன்று 'புல்லட்' யானைக்கு மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தினர். யானை மயக்க நிலையை அடைந்த பிறகு, அதன் 4 கால்களையும் கயிறு மூலம் கட்டி வைத்துள்ளனர்.இந்த யானையை கும்கி உதவியுடன் லாரியில் ஏற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 'புல்லட்' யானை பிடிபட்டதால், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியை சேர்ந்த மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

 

Read Entire Article