கூச் பெஹர் கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வென்றது தமிழகம்

4 months ago 17

அகமதாபாத்,

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கூச் பெஹர் கோப்பை (4 நாள் ஆட்டம்) கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதில் தமிழ்நாடு- குஜராத் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்று முதலில் பேட் செய்த குஜராத் அணி முதல் இன்னிங்சில் 380 ரன்களும், தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 413 ரன்னும் எடுத்தன. தொடர்ந்து 33 ரன் பிந்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய குஜராத் அணி 7 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதைத் தொடர்ந்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி கடைசி நாளான நேற்று ஒரு விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. ஆட்டம் டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழக வீரர் ஜெயந்த் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Read Entire Article