ரஷியா வெளியுறவு மந்திரி வடகொரியா பயணம்

6 hours ago 2

மாஸ்கோ,

உக்ரைன் நாட்டுடன் ரஷியா போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு வடகொரியா ராணுவ உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றன.

போர் தொடர்ந்து நீடித்து வருவதால் இருதரப்பிலும் ஏராளமான இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரஷியா தரப்பில் சண்டையிட போதுமான ஆட்கள் இல்லாமல் சிரமப்படும் நிலை உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கூலிப்படையினரை களம் இறக்கி சண்டையிட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் ரஷியா வெளியுறவு மந்திரி செர்ஜி லவ்ரோவ் அரசுமுறை பயணமாக வடகொரியாவுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) செல்கிறார். 3 நாட்கள் பயணமாக இதில் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்-ஐ சந்தித்து ராணுவ உதவிகளை கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read Entire Article