திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா: செப்டம்பர் 24-ந்தேதி கொடியேற்றம்

6 hours ago 2

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் 24-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி பங்கேற்று பேசியதாவது:-

பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்து முடிக்க அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தின்போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஒவ்வொரு பிரிவையும் ஆய்வு செய்து பல முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக செப்டம்பர் மாதம் 16-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி, 23-ந்தேதி பிரம்மோற்சவ அங்குரார்ப்பணம், 24-ந்தேதி கொடியேற்றம், 28-ந்தேதி 'சிகர' நிகழ்ச்சியாக கருட வாகன வீதிஉலா (கருடசேவை), அக்டோபர் மாதம் 1-ந்தேதி தேரோட்டம், 2-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது. தினமும் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடக்கின்றன.

வி.ஐ.பி. தரிசனம் ரத்து

பிரம்மோற்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள் என்பதால் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான தரிசனம், கோவிலுக்கு காணிக்கை வழங்கிய காணிக்கையாளர்களுக்கான தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்துப் பிரச்சினைகளை தீர்ப்பார்கள். தரிசன கவுண்ட்டர்கள், கோவிலின் நான்கு மாடவீதிகள், முக்கிய இடங்களில் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படும். பக்தர்களின் தேவைகளை அறிந்து என்ஜினீயரிங் பணிகள் மேற்கொள்ளப்படும்.

லட்டு இருப்பு

கோவிலின் நான்கு மாடவீதிகளில் கழிவறைகள் சுத்தமாக வைத்திருக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். மின் விளக்கு அலங்காரம், பழம், காய்கறிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி அரங்கு பக்தர்களை கவரும் வகையில் அமைக்க வேண்டும். பக்தர்களுக்கு சேவை செய்ய இளைஞர்கள், இளம்பெண்கள் வரவேற்கப்படுகின்றனர். செப்டம்பர் மாதம் 27-ந்தேதி இரவு 9 மணியில் இருந்து 29-ந்தேதி வரை காலை 6 மணி வரை திருப்பதி மலைப்பாதைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அதிகளவில் லட்டு பிரசாதங்களை தயாரித்து கையிருப்பாக வைத்திருக்க வேண்டும். மேலும் தமிழில் வழிகாட்டல் தேவைப்பட்டால் தயங்காமல் கூறுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Read Entire Article