'ஜூனியர்' படத்தின் டிரெய்லரை வெளியிடும் எஸ்.எஸ்.ராஜமவுலி

5 hours ago 1

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. தற்போது இவர் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக பாலிவுட்டிலும், தமிழில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்திலும், தெலுங்கில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ''மாஸ் ஜாதரா'' படத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் ஸ்ரீலீலா, ராதா கிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் 'ஜூனியர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகனாக கிரீத்தி ரெட்டி நடித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 18-ந் தேதி வெளியாக உள்ளது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 05.36 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த டிரெய்லரை பிரபல இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமவுலி வெளியிட உள்ளார்.

A highly relatable and emotion-packed family trailer is on its way⏳#JuniorTrailer digital launch by THE PRIDE OF INDIAN CINEMA @ssrajamouli Garu today at 5:36 PM ❤A Rockstar @ThisIsDSP Musical #Junior grand release on July 18th ✨#JuniorOnJuly18th @geneliadpic.twitter.com/WyLngbCoIV

— Aditya Music (@adityamusic) July 11, 2025
Read Entire Article