குவாலிபயர் 2ல் ராயலை வீழ்த்தி 3வது முறையாக பைனலுக்கு சன் ரைசர்ஸ் தகுதி: நாளை எம்ஐ கேப்டவுனுடன் பலப்பரீட்சை

2 hours ago 2

செஞ்சூரியன்: 6 அணிகள் பங்கேற்று எஸ்ஏ 20 தொடர் தென்ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு செஞ்சூரியனில் நடந்த குவாலிபயர் 2 போட்டியில் நடப்பு சாம்பியன் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்-பார்ல் ராயல்ஸ் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ரூபின் ஹெர்மன் நாட் அவுட்டாக 81, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 59 ரன் எடுத்தனர். கேப்டன் டேவிட் மில்லர் 6, தினேஷ் கார்த்திக் 2 ரன்னில் அவுட் ஆகினர்.

பின்னர் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் டோனி டி ஜோர்ஜி 79, ஜோர்டான் ஹெர்மன் நாட் அவுட்டாக 69 ரன் விளாசினர். 19.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன் எடுத்த சன்ரைசர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டோனி டி ஜோர்ஜி ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல் 2 சீசனிலும் சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் 3வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. நாளை இரவு 9 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் பைனலில் மும்பை இந்தியன்சின் எம்ஐ கேப்டவுன் அணியுடன் சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறது.

 

The post குவாலிபயர் 2ல் ராயலை வீழ்த்தி 3வது முறையாக பைனலுக்கு சன் ரைசர்ஸ் தகுதி: நாளை எம்ஐ கேப்டவுனுடன் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Read Entire Article