குழந்தை திருமண தடை சட்டத்தை தனிநபர் சட்டங்களால் தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

3 months ago 15

புதுடெல்லி: குழந்தை திருமண தடுப்பு சட்டம் என்பது குழந்தை திருமணத்தை தடுக்க உருவாக்கப்பட்டதாகும். இதில் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை திருமணம் செய்து உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமைக்கு நிகரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில், ‘‘நாங்கள் இந்த விவகாரத்தில் இருக்கும் முழு சட்டங்களையும் ஆய்வு செய்தோம். குழந்தை திருமண தடை சட்டத்தை தனிநபர் சட்டங்களால் தடுக்க முடியாது. குழந்தைதிருமணத்தைத் தடுப்பதிலும், சிறார்களை பாதுகாப்பதிலும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் ” என்று தெரிவித்து, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.

The post குழந்தை திருமண தடை சட்டத்தை தனிநபர் சட்டங்களால் தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article