குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க கோரி ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

2 days ago 3

விருதுநகர், மார்ச் 29: குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க கோரி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட கன்வீனர் சரஸ்வதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை ஈடு செய்ய அகவிலைப்படி வழங்க வேண்டும்.

மருத்துவப்படி, ஈமச்சடங்கு தொகை, ஓய்வு பெறும் நாளில் ஓட்டுமொத்த தொகை, ஜிபிஎப், எஸ்பிஎப் ஆகியவற்றை வழங்க வேண்டும். பண்டிகை முன்பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

The post குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க கோரி ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article