கும்மிடிப்பூண்டி அருகே ஓடையில் செத்து மிதந்த வாத்துகள்: ரசாயன கழிவு காரணமா?

1 week ago 3


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஓடையில் கொத்துக் கொத்தாக வாத்துகள் செத்து மிதந்தன. இதற்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவு காரணமா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட நாகராஜ் கண்டிகையில் உள்ள பெரிய ஏரிக்குச் செல்லும், ஓடையில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த வாத்துகள் திடீரென கொத்துகொத்தாக செத்து மிதந்ததால் அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். வடகிழக்கு பருவமழை காலத்தில் பெரிய ஏரி நிரம்பி அதிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது இந்த நாகராஜ் கண்டிகை ஓடை வழியாக ஏழு கண் பகுதிக்குச் சென்று பழவேற்காடு வங்க கடலில் கலக்கிறது.

விவசாய பாசனத்திற்காக பயன்படும் இந்த ஓடை நீரில் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு ரசாயன கழிவுகள் கலப்பதால் அந்த தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும், விளைநிலத்தின் மண் கெட்டு அதில் பயிரிடப்படும் நெற்பயிர்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஓடைநீரில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஆண்டு இதேபோன்று ஓடை நீரில் குளிக்கச் சென்ற 6 எருமை மாடுகள் உயிரிழந்ததாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே ஓடையில் செத்து மிதந்த வாத்துகள்: ரசாயன கழிவு காரணமா? appeared first on Dinakaran.

Read Entire Article