கும்பாபிஷேக ஏற்பாடு.. மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் யாகசாலை பணி தீவிரம்

2 weeks ago 5

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கருவறையின் மேற்கூரை தீ விபத்தில் எரிந்ததால் புதிய மேற்கூரை அமைத்து திருப்பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 24ம் தேதி ரூ.1.70 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். ஆகம விதிக்குட்பட்டு புதிய உத்திரம், பட்டியல், கழுக்கோல் அமைத்து மேற்கூரை அமைக்கும் பணி நடந்தது.

கடந்த 4 வருடங்களாக நடந்து வந்த திருப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மே மாதம் 11-ம் தேதி ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக கும்பாபிஷேக யாகசாலை கால் நாட்டு விழா கடந்த 17-ம் தேதி நடந்தது. கோவில் தந்திரி சங்கரநாராயணன் கால் நாட்டினார். இதையடுத்து யாகசாலை அமைக்கும் பணி தொடங்கியது. ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் யாகசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்ததும் மே 7-ம் தேதி கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பணிகள் துவங்குகின்றன. இதில் முதல் 2 நாட்கள் பரிகார பூஜைகள் நடக்கின்றன. மீதி நாட்கள் கும்பாபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு 11-ம் தேதி ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடக்கிறது. 

Read Entire Article