சென்னை: கும்பமேளா கூட்டநெரிசலை கட்டுப்படுத்துவதில் பா.ஜ.க. அரசு தோல்வியடைந்துவிட்டது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் 2,500 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது; எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் அரசு. தமிழ்நாட்டில் யாரும் பட்டினியாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தை முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டுவந்தார். திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திலும் பட்டதாரிகளை உருவாக்கி வரும் திராவிட மாடல் அரசு, தற்போது பட்டாதாரர்களாகவும் மாற்றி வருகிறது. பட்டதாரிகளை உருவாக்கி வரும் திராவிட மாடல் அரசு, தற்போது பட்டாதாரர்களாகவும் மாற்றி வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் பட்டதாரிகளை உருவாக்கி வரும் திமுக அரசு, பட்டாதாரர்களாகவும் மாற்றி வருகிறது என்று கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின்; கும்பமேளா கூட்டநெரிசலை கட்டுப்படுத்துவதில் பா.ஜ.க. அரசு தோல்வியடைந்துவிட்டது. கூட்டநெரிசலை தடுக்க முடியாததால் தமிழ்நாட்டு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் வாரணாசியில் தவித்து வருகின்றனர்.
வாரணாசியில் இருந்து மாற்றுத்திறனாளி வீரர்கள் விமானம் மூலம் சென்னை திரும்ப அரசு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளி வீரர்கள் இன்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் சென்னை வர உள்ளனர். தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை பெற்றுத் தர அண்ணாமலையால் இயவில்லை. தமிழ்நாட்டுக்கு தேவையான கல்வி நிதியை வழங்க ஒன்றிய அரசு மறுக்கும் நிலையில், அதனை திசைதிருப்ப பாஜகவினர் முயல்கின்றனர். அறிவாலயத்துக்கு அல்ல; அண்ணா சாலை பக்கம் அண்ணாமலை வரட்டும் என்று கூறினார்.
The post கும்பமேளா கூட்டநெரிசலை கட்டுப்படுத்துவதில் பா.ஜ.க. அரசு தோல்வியடைந்துவிட்டது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.