குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் ரோடோடென்ட்ரான் மலர்கள்

10 hours ago 2

குன்னூர்: இமாலய பகுதிகளில் காணப்படும் ரோடோடென்ட்ரான் ஹார்பேரியம் மலர்கள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மலர்ந்துள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நுற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. இவை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து நடவு செய்யப்பட்டவை. குறிப்பாக இமயமலை பகுதிகளில் மட்டும் காணப்படும் ருத்ராட்சை மரங்கள் மற்றும் குரங்குகள் ஏறா மரங்கள் என பல்வேறு மரங்கள் உள்ளன. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 2500 அடி உயரத்தில் அடர்ந்த சோலை காடுகளில் மட்டும் காணப்படும் ரோடோ டென்ட்ரான் ஹார்பேரியம் வகையான மலர்கள் தற்போது சிம்ஸ்பூங்காவில் பூக்க துவங்கியுள்ளன.

இமாச்சல் பகுதிகளில் மட்டுமே காணப்படும் இவ்வகையான மரங்கள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ளதை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். மேலும் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே ஒரு மரம் உள்ளது. அதுவும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மட்டுமே உள்ளது. இவ்வகை மரங்களில் குளிர் காலத்தில் மட்டுமே மலர்கள் மலரும். தற்போது குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ரோடோடென்ட்ரான் ஹார்பேரியம் மலர்கள் பூத்துள்ளன. இதை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.

The post குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் ரோடோடென்ட்ரான் மலர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article