மதுரை, மார்ச் 6: மதுரை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த, பொதுமக்களுக்கான குறைதீர் முகாம் வரும் 8ம் தேதி நடக்கிறது. குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த முகாம் நடத்தப்படும். இதில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், நகல் அட்டை கோருதல், கைபேசி எண் மாற்றம், அங்கீகாரச் சான்று, தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் மற்றும் இதர சேவைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் நேரடியாக முகாம் அலுவலரிடம் வழங்கி தீர்வு பெறலாம். இத்தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post பொது விநியோக குறைதீர் முகாம் appeared first on Dinakaran.