பழநி, மார்ச் 6:அனைத்திந்திய தமிழ் எழுத்தளர்கள் சங்க நிர்வாகி பழநி மகிழ்நன் தமிழ்நாடு முதல்வருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பழநி கோயில் நிர்வாகம் சார்பில் விரைவில் சித்த மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகங்களின் கீழ் உள்ள கல்லூரிகளை ஒருங்கிணைத்து பழநியாண்டவர் பல்கலைக்கழகம் துவங்க வேண்டும். கோயில் நிர்வாகத்தின் சார்பில் வேளாண் கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி துவங்க வேண்டும். பழநி வரும் பக்தர்களுக்கு அதிகளவில் இலவச தங்கும் விடுதிகள் ஏற்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். கிடப்பில் கிடக்கும் பழநி- ஈரோடு அகல ரயில் பாதை திட்டத்தை உயிர்ப்பித்து விரைவுபடுத்த வேண்டும். பழநி நகருக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர கோயில் நகரான பழநியை சுற்றுலா நகராக்க வேண்டும். பழநி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் வேலைவாய்ப்புகள் பெறும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
The post பழநியில் 2வது ரோப்கார் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் appeared first on Dinakaran.