குன்னூர், மே 3: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு குன்னூரில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை வட்டாட்சியர் துவக்கி வைத்தார். 2026 – சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் குன்னூர் வட்டாட்சியர் ஜவஹர் தலைமையில் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ‘வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்‘ என்கிற தலைப்பில் வட்டாட்சியர் வாக்காளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து, வருவாய்த்துறை ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் ஆகியோர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கையெழுத்து பலகையில் தங்களது கையெழுத்திட்டு வாக்களிப்பதன் அவசியத்தை குறித்து அறிந்து கொண்டனர்.
The post குன்னூரில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்; வட்டாட்சியர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.