குட்டி குட்டி வீட்டு குறிப்புகள்

3 months ago 19

* அரிசியையும் பருப்பையும் வாசனை வரும் வரை வறுத்து, பின்னர் களைந்துபோட்டு பொங்கல் செய்தால் சீக்கிரம் வெந்துவிடுவதுடன், சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
* இரவே உருளைக்கிழங்கை நறுக்கி வைக்க வேண்டுமா? எலுமிச்சை பழச்சாற்றில் கிழங்கு துண்டுகளை போட்டு பிரட்டி எடுத்து வைத்தால் கிழங்கு கறுத்து போகாமல் இருக்கும்.
* காய்கறிகள் வாடிப்போய் இருந்தால் தண்ணீரில் எலுமிச்சைப் பழச்சாறு கலந்து காய்கறிகளை சிறிது நேரம் ஊற விட்டு எடுத்தால் பசுமையாக இருக்கும்.
* சோறு குழைந்துவிடாமல் இருக்க சோறு வடிக்கும் முன்பு கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது சிறிது நெய் கலந்து வடிக்க வேண்டும். எலுமிச்சைச்சாறு சில துளிகள் விட்டும் வடிக்கலாம். சோறு பொல பொலவென்றிருக்கும்.
* புளிக்குழம்பு, ரசம் போன்ற வற்றிற்கு புளியை ஊறவைக்கும் போது உப்பையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும். அப்போது தான் சுவையும் நன்றாக இருக்கும்.
* சாம்பார் கொதித்த பின்னரே காய்கறிகளை போட வேண்டும். காய்கள் வெந்ததும் புளிகரைச்சலில் கலந்து அதன் பிறகு தாளிக்க வேண்டும். தாளித்து கொதித்த பின் அரைத்த தேங்காய் விழுதைக் கலந்து கொதிக்க விட்டு இறக்கினால் சாம்பார் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
* பச்சை மஞ்சள் கிடைக்கும் போது இரண்டு கிலோ வாங்கி கொதித்த தண்ணீரில் நன்றாக வைத்து நன்றாக உலரவைத்து சுத்தம் செய்து, மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் சுத்தமான மஞ்சள் தூள் கிடைக்கும். சமையலில் இந்த மஞ்சள்தூள் நல்ல நிறமாக கண்ணைப்பறிக்கும்.
* தோசை மாவுடன் வறுத்த ரவாவை கலந்து சுட தோசை மொறு மொறுப்பாக இருக்கும்.
* வற்றல் மிளகாய், பொட்டுக் கடலை ஆகியவற்றை பயன் படுத்துவதற்கு முன்பு தண்ணீரில் கழுவிக்கொள்வது சுகாதாரமானது.
* தாளிக்கும் போது மிளகாய் வற்றல் கருகாமல் இருக்க அதை தண்ணீரில் கழுவி எடுத்துக் கொண்டு கத்தரியால் நறுக்கிக் கொள்ளலாம்.
* முருங்கைக் கீரை தண்ணீர் சாறு வைக்கும்போது அரிசிகளை நீரில் அளவாக உப்பிட்டு வெங்காயம் அரிந்து போட்டு தண்ணீர் கொதி வந்ததும் கீரையைப்போட வேண்டும். தாளிக்கும்போது சீரகம், மிளகாய் நறுக்கிப்போட வேண்டும். கடுகு போட வேண்டாம். நல்ல சுவை கிடைக்கும்.
– அ. ப. ஜெயபால்

The post குட்டி குட்டி வீட்டு குறிப்புகள் appeared first on Dinakaran.

Read Entire Article