
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இப்படத்திற்கு 'யு/ஏ' தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
'குட் பேட் அக்லி' படம் இன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,000-க்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட உள்ள நிலையில், அஜித் குமார் ரசிகர்கள் திரைப்படத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான 'ஏகே தி டைகர்' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை டார்க்கி எழுதி பாடியுள்ளார்.