பல்கலைக்கழகத்தில் போலீஸ் அதிகாரியின் மகன் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி

1 day ago 3

வாஷிங்டன்,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் இன்று (அந்நாட்டு நேரப்படி) காலை வழக்கம்போல் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று கொண்டிருந்தனர்.

காலை 11.50 மணியளவில் பல்கலைக்கழகத்திற்குள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவன் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினான். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய மாணவனை சுட்டு வீழ்த்தினர். துப்பாக்கி சூடு நடத்தியது அப்பகுதியை சேர்ந்த போலீஸ் அதிகாரியின் மகன் பென்னிக்ஸ் இக்னர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article