
சென்னை,
சமூகச் சீர்திருத்தவாதி ஜோதி ராவ் புலேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'புலே'. இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு எழுந்ததால் ரிலீஸ் தள்ளிப்போனது.
புலே திரைப்படம் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போனதை தொடர்ந்து, தணிக்கை குழுவை இயக்குனர் அனுராக் காஷ்யப் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"நாட்டில் சாதிகளே இல்லையென்றால், ஜோதிபாவும் சாவித்ரி புலேவும் அதை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் என்ன? தணிக்கைக்குச் செல்லும் ஒரு படத்தை, சென்சார் அதிகாரிகள் நால்வரை தாண்டியும் சில குழுக்கள் பார்ப்பதும், பின் அதை எதிர்ப்பதும் எப்படி? இங்கு மொத்த சிஸ்டமே தவறாக உள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.