'நான் ஏகலைவன் என்றால், அவர் எனக்கு துரோணாச்சாரியார்' - 'கூலி' நடிகர்

1 day ago 4

சென்னை,

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உபேந்திரா. இவர் தற்போது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தில் ரஜினிகாந்துடன் நடித்து வருகிறார்.

இது மட்டுமில்லாமல், சிவராஜ் குமாருடன் '45' என்ற படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது இப்படத்தின் புரமோசனில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அப்போது கூலி படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து உபேந்திரா பகிர்ந்தார்.

அவர் கூறுகையில், 'லோகேஷ் கனகராஜ் என்னிடம் 'கூலி' கதை சொன்னபோது அவரிடம் எதுவும் கேட்கவில்லை. நான் ரஜினிகாந்த் சாருக்கு அருகில் சில நிமிடங்கள் நின்றாலே போதும் என்றுதான் சொன்னேன். நான் ஏகலைவன் என்றால், ரஜினி சார்தான் துரோணாச்சாரியார். அவர் அனைவருக்கும் என்டெர்டெயிண்மெண்ட் அளித்திருக்காலம். ஆனால் எனக்கு உத்வேகம் அளித்துள்ளார். அவருடன் பணியாற்றுவதை நான் பாக்கியமாக கருதுகிறேன்' என்றார்.

Read Entire Article