"குடும்பஸ்தன்" படத்தின் 50வது நாள் போஸ்டர் வெளியீடு

4 hours ago 2

சென்னை,

தமிழ் சினிமாவில் 'ஜெய் பீம், லவ்வர், குட் நைட்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.

மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியுங்கள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம் தற்போது 50வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் உலக அளவில் சுமார் ரூ.28 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் தளத்தில் வெளியானது. 

Big thanks to everyone who made this possible ❤️ #Kudumbasthan pic.twitter.com/6DaOnOq37T

— Manikandan (@Manikabali87) March 14, 2025
Read Entire Article